Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொல்லங்குடி காளியம்மன் கோயிலில் ... சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் தேரோட்டத் திருவிழா சித்தலூர் பெரியநாயகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் கடலில் பண்டைய நகரம் கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
மாமல்லபுரம் கடலில் பண்டைய நகரம் கண்டுபிடிப்பு!

பதிவு செய்த நாள்

18 மார்
2016
11:03

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடலில், பாறை கற்களாலான, சங்க காலத்திற்கு முந்தைய, பண்டைய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்நகரின் கட்டட இடிபாடுகளை, தேசிய கடல் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கி வரும், தேசிய கடல் ஆய்வு நிறுவனம், மாமல்லபுரம் கடல் மற்றும் நிலப்பரப்பில் ஆய்வு நடத்தி, பாறை கற்களாலான, பண்டைய கட்டட வடிவமைப்புகளை கண்டறிந்துள்ளது. இந்நிறுவனத்தின், கடல் தொல்லியல் ஆய்வுப் பிரிவின் தலைவர் ராஜிவ் நிகாம், முதன்மை அறிவியலாளர் விக்டர் ஜே லவ்சன், கடல் தொல்லியலாளர்கள் சுந்தரேஷ், கவுர், சிலா திருப்பதி ஆகியோரை கொண்ட குழுவினர், கடந்த, 11ம் தேதி துவங்கி, நேற்று வரை மாமல்லபுரம் கடலில் இதற்காக ஆய்வு நடத்தினர்.மாமல்லபுரம் துவங்கி, சாலவான்குப்பம், புலிக்குகை பகுதி வரை, 12 ச.கி.மீ., பரப்பு கடற்பகுதியில், நில உள்ளமைப்பு அறிவியல் என்ற, அதிநவீன முறையில், 15 இடங்களில், நவீன கருவி மூலம் ஒலி அலை அனுப்பி, புதைந்திருந்த கட்டடங்கள் ஆராயப்பட்டன.

அப்போது, கடற்கரை கோவிலின் கிழக்கில், கடலில், கட்டுமான இடிபாடு இருப்பதற்கான சமிக்ஞை கிடைத்தது; அந்த இடத்தில் நீர்மூழ்கி வீரர்கள் மூழ்கி ஆய்வு நடத்தினர். அப்போது, மேற்பரப்பில் இருந்து, 6 மீ., ஆழத்தில், தகர்ந்து, சிதறிக் கிடந்த, வெவ்வேறு அளவு வெட்டுப் பாறைகள், சுவர் வடிவமைப்பை கண்டறிந்தனர்.அவை, கடற்கரை கோவிலில் இருந்து, 1 கி.மீ., கிழக்கிலும், 700 மீ., வட கிழக்கிலும் கண்டறியப்பட்டது. கோவிலின் தென் புற கடற்கரை மணற்பரப்பில், கிரவுண்ட் பெனிட்ரேட்டிங் ரேடார் என்ற, நவீன கருவி மூலம் நடத்திய ஆய்வில், நிலத்தடியில், 3 முதல், 5 மீ., ஆழத்தில், பண்டைய வடிவமைப்புகள் புதைந்திருப்பதும் கண்டறியப்பட்டது. கடற்பரப்பாக மாறிய நிலப்பரப்பு:மாமல்லபுரம் நிலப்பகுதி சிற்பங்கள் எந்த காலத்தவை என, ஏற்கனவே அறியப்பட்டுள்ளன. பல நுாற்றாண்டுகளுக்கு முன் நிலப்பரப்பாக இருந்த இந்த பகுதி, தற்போது கடற்பரப்பாக மாறியுள்ளது. முன் இருந்த நிலப்பரப்பில், வீடுகள், கோவில்கள் என அமைந்திருந்து, கடற்பரப்பாக மாறிய போது, நீரில் மூழ்கி இருக்கலாம்.

கடலில் மூழ்கியுள்ள நகரம் போன்ற அமைப்பின் காலம், நிலப்பரப்பு சிற்பங்களின் காலத்திற்கும் பழமையானதாக இருக்கலாம்; சங்க காலத்திற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். அது குறித்தும், கடலில் மூழ்கியுள்ள நகரம் குறித்தும், ஆராய, துவக்க ஆய்வு நடத்தி, தகர்ந்து, சிதறிக் கிடக்கும் பாறைக் கற்கள், சுவர் ஆகியவற்றை கண்டறிந்துள்ளோம். நாங்கள் கண்டறிந்த சிதறல்கள் மீது, 15 செ.மீ., தடிமனுக்கு பாசி படிந்துள்ளது; அதை அகற்றி, முழுமையாக ஆராய, பல ஆண்டுகளாகும். - ராஜிவ் நிகாம், கடல் தொல்லியல் ஆய்வுப் பிரிவின் தலைவர்

ஏழு கோவில்கள் இருந்தனவா? மாமல்லபுரம், பல்லவ சிற்பக்கலை அருங்காட்சியக நகராக விளங்குகிறதுஇந்நகரின் கடற்கரையில் உள்ள சிற்பங்கள், 1,400 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டதாக, அக்கால கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன நிலப்பகுதியில் அமைந்துள்ளவை மட்டுமின்றி, கடலிலும் இத்தகைய சிற்பங்கள் மூழ்கி இருக்கலாம் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர் கடற்கரையில், தற்போது ஒரு கோவில் மட்டுமே உள்ள நிலையில், இப்பகுதி கடல் வழியே பயணம் செய்த பழங்கால பயணி ஒருவர், இங்கு ஏழு கோவில்கள் கண்டதாக, தான் எழுதிய பயண நுாலில் குறிப்பிட்டுள்ளார் ஏழு கோவில்கள் இருந்து இருந்தால், மற்றவை கடலில் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.இப்போது நடத்தப்பட்ட ஆய்வில், மாமல்லபுரம் கடல் மற்றும் கடற்கரை மணல் பரப்பில், சங்க காலத்திற்கு முந்தைய நகரம் புதைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேருக்கு டிச., 6ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar