பதிவு செய்த நாள்
18
மார்
2016
11:03
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அடுத்த சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த சித்தலுார் பெரியநாயகி அம்மன் தேர்த்திருவிழா கடந்த 7ம் தேதி துவங்கியது.மயானக்கொள்ளையை தொடர்ந்து நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்கரித்து தேரில் ஏற்றி வடம் பிடித்து இழுத்தனர். ஏற்பாடுகளை தர்மகர்த்தா பாஞ்சாலை, கோவிந்தசாமி, கண்ணன், பூசாரிகள் சுரேஷ், குமார், ஏழுமலை, நாராயணன், கோவிந்தன், ராமச்சந்திரன் மற்றும் இந்து அறநிலையத் துறை ஆய்வாளர் சரவணன் செய்திருந்தனர். பாதுகாப்பு பணிகளை டி.எஸ்.பி., மதிவாணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், பாண்டியன், ேஹமமாலினி, கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் மேற்கொண்டனர்.