ஜேஷ்டாதேவி வழிபாடானது இன்றளவும் பல ஆலயங்களிலும் வழிபடப்படுவதுடன், சிலர் தனது உபாசனை தெய்வமாகவும் வழிபட்டு வருகிறார்கள். ஆகமங்களிலும், ஜேஷ்டாதேவி உபாசனைகளைப் பற்றி உயர்வாகவே கூறப்பட்டிருக்கிறது. அவளை வழிபடுவதினால், நாடும் வீடும் பயமின்றி நல்ல மேன்மைகளை அடைவார்கள் என்றே விளக்கியிருக்கிறது. மூத்த தேவியே மூதேவி என்று மருவி இருக்கிறது ! ஆதலின், அவளை மூதேவி என்று அழைப்பதினால் தவறேதுமில்லை. எல்லா சக்திகளும் அந்தப் பராசக்தியின் ஓர் அம்சமே ! ஆதலின் ஜேஷ்டா தேவியை வழிபடுவது. சாலச் சிறந்ததே ! இந்த வேதையைப் பற்றி சிலர் தவறுதலான எண்ணங்களை காலங்காலமாக சொல்லி வருகிறார்கள். எனினும், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தீமைகள் நீங்கி நன்மைகள் பெற ஜேஷ்டாதேவியின் வழிபாடு இன்றியமையாதது.