விழுப்புரம்: திருவாமாத்துார் முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வர பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நடந்தது. விழாவை யொட்டி நேற்று காலை 6:00 மணிக்க பொய்கைக்கரை விநாயகருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அபிராமேஸ்வரர், முக்கிய வீதிகள் வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.