அன்னுார்: கருவலுார் மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. கருவலுார், மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 20ம் தேதி அம்மன் பூத வாகனத்திலும், 21ம் தேதி ரிஷப வாகனத்திலும், உலா வந்து அருள்பாலித்தார். இன்று காலை, 6:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். மதியம், 2:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. சிரவை ஆதினம் குமரகுருபரசாமிகள், பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சாமிகள் உள்ளிட்டோர், வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். மாலை வரை தேரோட்டம் நடக்கிறது. மாலையில் நாதஸ்வர கச்சேரியும், ஒயிலாட்டமும் நடக்கிறது.