பதிவு செய்த நாள்
23
மார்
2016
12:03
வால்பாறை: வால்பாறையில் நடந்த பிரதோஷ பூஜையில், சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் பங்குனி உத்திரதிருவிழாவையொட்டி நடந்த பிரதோஷபூஜையில், நேற்றுமுன்தினம் மாலை, 5:30 மணிக்கு, சிவலிங்கத்துக்கு சந்தனம், திருநீரு, இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜைகள் நடந்தன. பின்னர் மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், காசிவிஸ்வநாதர் தேவியருடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.