காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தையொட்டி நேற்று தேர் திருவிழா நடந்தது. காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக தீபாரதனை முடிந்து ரிஷபகொடி ஏற்றப்பட்டது.நேற்று முன்தினம் திருக்கல்யாணம் முடிந்து நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. கலெக்டர் கரிகாலன், துணை மாவட்ட ஆட்சியர் தினேஷ்,கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் தேர்திருவிழாவை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின் தேர் பாரதியார்சாலை,கென்னடியார் வீதி,மாதாகோவில் வீதி வழியாக நிலையை வந்தடைந்தது.