சேலம்: சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள, எல்லைபிடாரியம்மன் கோவில் திருவிழா நேற்று பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கூடைகளில் கொண்டு வரப்பட்ட பூக்களை அம்மனுக்கு சாத்தினர். வரும், 29ம் தேதி மாவிளக்கு ஊர்வலம், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி, 30ம் தேதி அலகு குத்துதல், அம்மன் ஊர்வலம், பொங்கல் வைபவம், ஏப்ரல் 1ம் தேதி அக்னி குண்டம் மற்றும் பால்குட ஊர்வலம், அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.