கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பங்குனி உத்திர விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. பங்குனி உத்திரத்தையொட்டி கள்ளக்குறிச்சி ஏமப்பேர் சுப்ரமணியர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். கோமுகி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடத்தி, சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் கந்த சஷ்டி வாசித்து மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். மாலை 4:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, வீதியுலா நடந்தது. கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை முருகன், இந்திலி பாலசுப்ரமணியர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், சொர்ணபுரீஸ்வரர், முடியனுார் அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர் ஆகிய கோவில்களில் பங்குனி உத்திர விழா நடந்தது.