விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த நன்னாடு காமன் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா நடந்தது. விழாவை யொட்டி கடந்த 10ம் தேதி காமன் கோவிலில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து 18 ம் தேதி மாலை ரதி மன்மதன், திருக்கல்யாணம், 20ம் தேதி அம்மனுக்கு சாகை வார்த்தல், 22ம் தேதி இரவு, அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி வீதியுலா நடந்தது.