பதிவு செய்த நாள்
29
மார்
2016
11:03
உடுமலை: சித்தி விநாயகர் கோவில் ஏழாமாண்டு கும்பாபிேஷக விழா நடந்தது. உடுமலை, பழனியாண்டவர் நகரில் அமைந்துள்ளது, சித்தி விநா யகர் கோவில். கோவிலில் ஏழாமாண்டு கும்பாபிேஷக நிறைவு விழா நேற்று நடந்தது. இதற்கான விழா நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கியது. காலை, 6:00 மணிக்கு, கணபதி ேஹாமம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, சித்தி விநாயகர், பாலமுருகன், விஷ்ணுதுர்க்கை, தீர்த்த விநாயகர், நவக்கிரக நாயகர்களுக்கு கலச அபிேஷகம் செய்யப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு, சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, வெள்ளி கவச அலங்காரம், தீபாராதனை நடந்தது. பழனியாண்டவர் நகர், ஜீவா நகரை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர்.