பதிவு செய்த நாள்
29
மார்
2016
11:03
கடலுார்: திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவில் மகா சம்ப்ரோஷணம் வரும் 3ம் தேதி நடக்கிறது. கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மலையில் பிரசித்தி பெற்ற லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உள்ளது. கல்வி, ஞானம் தரும் கடவுளாக வணங்கப்படும் இக்கோவிலில் வரும் 3ம் தேதி மகா சம்ப்ரோஷணம் நடக்கிறது. அதனையொட்டி, நாளை மாலை 5:00 மணிக்கு மேல், அங்குரார்ப்பணம், வேத திவ்ய பிரபந்த துவக்கம், பிரதான குண்டங்களில் அக்னி பிரதிஷ்டை நடக்கிறது. 31ம் தேதி யாக சாலை புண்யாகவாசனம், கும்ப ஆராதனம், 1ம் தேதி காலை நித்ய விசேஷ ஹோம ங்கள் நடக்கிறது. தொடர்ந்து 2ம் தேதி மாலை விசேஷ மகா சாந்தி திருமஞ்சனம், சயனாதிவாசம், சர்வ தேவார்ச்சனம், மூர்த்தி ஹோமம், பூர்ணாகுதி நடக்கிறது. கும்பாபிஷேக தினமான 3ம் தேதி காலை 5:00 மணிக்கு விஸ்வரூபம், அக்னி பிரணயணம், கும்ப ஆராதனம், விசேஷ ஹோமங்கள், மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி 8:00 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் மகா சம்ப்ரோஷணம் நடக்கிறது.