பதிவு செய்த நாள்
29
மார்
2016
12:03
அவிநாசி: அவிநாசி கோவில் தேர்களுக்கு, நடப்பாண்டு, புதிய அலங்கார துணி பொருத்தப்படுகிறது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 12ல் துவங்கி, 23 வரை நடைபெறுகிறது; 19 மற்றும், 20ல் தேரோட்டம் நடக்கிறது. பெரிய மற்றும் அம்மன் தேர்களை அலங்கரிக்கும் துணிகளின் வண்ணம் மங்கியதால், இந்தாண்டு துணிகள் வாங்கப்பட்டுள்ளன. மதுரையில் உள்ள ஒரு நிறுவனத்தில், அலங்கார துணி தைக்கும் பணி நடந்து வருகிறது. செயல் அலுவலர் அழகேசன் கூறுகையில், "சுவாமி மற்றும் அம்மன் தேர்களுக்கு அலங்கரிக்கும் துணி, 10 ஆண்டுகளானதால், பொலிவிழந்து விட்டன. நன்கொடையாளர் மூலம் புதிய அலங்கார துணி பெறப்பட்டு, தேர்கள் அலங்கரிக்கப்படும். அடுத்தாண்டு, பரிவார மூர்த்திகளின் தேர்களுக்கு புதிய துணி பொருத்தப்படும்,” என்றார்.