பதிவு செய்த நாள்
30
மார்
2016
12:03
திருப்பதி: திருமலை தேவஸ்தானம், அன்னதான அறக்கட்டளைக்காக, 100 கோடி ரூபாயை, நன்கொடையாக பெற்றுள்ளது. திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, காலை முதல் நள்ளிரவு வரை, தேவஸ்தானம், அன்னதானம் வழங்கி வருகிறது. இதற்காக, தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள அறக்கட்டளைக்கு, பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.ஏப்., 2015 முதல், மார்ச் 2016 வரை, அன்னதான அறக்கட்டளைக்கு, 100 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டு உள்ளது. தினசரி, இரண்டு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.