பாலமேடு: பாலமேட்டில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயில் விழா நான்கு நாட்களுக்கு நடந்தது. விழா நாட்களில் அம்மன் கரகம் ஊர்வலம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு மற்றும் அக்கினி சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை நாடார்கள் உறவின் முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.