புதுச்சேரி: முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் மண்டல அபிஷேகம் நிறைவு விழா நேற்று நடந்தது. முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன், வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கடந்த பிப்., 10ம் தேதி நடந்தது. கும்பாபிஷேத்தை தொடர்ந்து மண்டல அபிஷேகம் துவங்கியது. தினந்தோறும் சிறப்பு பூஜை, தீபாரதனை நடந்தது. மண்டல அபிஷேக நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு சிறப்பு அபி ஷேக ஆராதனை, ஹோமங்கள் நடந்தது. அதைத்தொடர்ந்து, திரவுபதியம்மன், வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.