பதிவு செய்த நாள்
01
ஏப்
2016
12:04
திருப்பதி: காளஹஸ்தியில், புராதான பஞ்சலோக சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில் உள்ள, அரவகொத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர், சீனிவாசன். அவர், நேற்று முன்தினம், தன் வீட்டிற்கு முன்புறம் உள்ள விவசாய நிலத்தை, இயந் திரத்தை பயன்படுத்தி தோண்டினார். அப்போது, புராதான, பஞ்சலோக சிலை ஒன்று கிடைத்தது. கிராமத்தில் உள்ள, ராமர் கோவிலுக்கு கொண்டு சென்ற சீனிவாசன், வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதிகாரிகள் நடத்திய ஆய்வில், அது சீதை சிலை என, கண்டறிந்தனர். 13 கிலோ எடையுள்ள சிலையின் வலது விரல், அதன் மேல் உள்ள, தாமரை வடிவம் உடைந்துள்ளது. இதை, உயரதிகாரிகளிடம், தாசில்தார் ஒப் படைத்தார்.