சேத்திரபாலபுரம் கால பைரவர் கோவிலில் முதல்வர் ரங்கசாமி வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2016 11:04
மயிலாடுதுறை: ‘சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்த பின்பு, முறையாக அறிவிப்போம்’ என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறினார். நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே சேத்திரபாலபுரம் கிராமத்தில் கால பைரவர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் தேய்பிறை அஷ்டமியன்று, கால பைரவரை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, குடும் பம் மற்றும் ஆயுள்விருத்தி ஏற்படும் என்பது ஐதீகம். பிரசித்தி பெற்ற இக்கோவிலில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று கால பைரவர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். பின்னர் நிருபர்களிடம் ரங்கசாமி கூறுகையில் “தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இக்கோவிலில் வழிபாடு செய்தேன். சட்டசபை தேர்தல் கூட்டணி இன்னும் அமைக்கவில்லை. அமைத்த பின்பு முறைப்படி அறிவிப்போம்” என்றார்.