பழநி: பழநி மலைக்கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட 4 விநாயகர் கோயில்களில் ஏப்.,3ல் கும்பாபிஷேக விழா நடக்கிறது.
பழநி ஞானதண்டாயுதபாணிசுவாமி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அடிவாரம் சரவணப்பொய்கை விநாயகர் கோயில், தலைவலி தீர்க்கும் விநாயகர்கோயில், கைலாசகிரி விநாயகர் கோயில் மற்றும் ராக்கால மடம் விநாயகர் ஆகிய நான்கு கோயில்களில் ஏப்.,3ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு ஏப்.,2 காலை 7.15 மணி முதல் ஏப்.,3 காலை 9.45 மணி வரை, கணபதி ஹோமம், மருந்து சாற்றுதல், சிறப்பு வேள்வி பூஜை, யாகபூஜைகள் உள்ளிட்டவைகள் நடக்கிறது. ஏப்.,3 (ஞாயிறு) காலை 8.30 மணிக்குமேல் 9.45 மணிக்குள் சரவணப்பொய்கை விநாயகர் கோயிலில் துவங்கி நான்கு விநாயகர் கோயில்களில் திருக்குட நன்னீராட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.