சில குழந்தைகள் சாப்பிட மறுத்து அடம் பிடிப்பார்கள். எந்நேரமும் சாக்லெட், இனிப்பு, கார பண்டங்களை அரைத்துக் கொண்டிருப்பதால், சத்தான உணவைக் கொடுத்தாலும் சாப்பிடுவதில்லை. இவர்களுக்கு முன்னுதாரணம் பிள்ளையார். இந்தக் குழந்தைகளை பிள்ளையார் கோயிலுக்கு அழைத்துப் போக வேண்டும். அங்கிருக்கும் தொந்தி கணபதியைக் காட்டி, பார்த்தாயா! இந்த பிள்ளையார் அம்மா சொல்லை தட்டாமல் கேட்பார். அவங்க அம்மா கொடுக்கிற மோதகம், தயிர்சாதம், அவல், பொரி என சத்தான உணவைச் சாப்பிட்டு எவ்வளவு குண்டாக இருக்கிறார் பார்த்தாயா? என்றெல்லாம் சொல்லித்தர வேண்டும். இது குழந்தைகள் மனதில் ஆழமாகப் பதியும். குழந்தைகளை விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். அவர் அருளால் குழந்தைகள் புஷ்டியாக இருக்கும் வகையில் சத்தான உணவை சாப்பிட துவங்குவார்கள்.