தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள சாலிகுளம் கிராமத்தில் புற்று வடிவில் காட்சியளிக்கிறார் முருகப் பெருமான். இக் கோயிலின் தல விருட்சமான வேல மரத்தினடியில் அமர்ந்து இரு கைகளையும் தனித்தனியே வைத்து முருகப் பெருமானை ஆழ்ந்து பிரார்த்தனை செய்தால், நம் கைகளிரண்டும் தாமாகவே ஒன்று சேருமாம். அப்படி சேர்ந்தால் நினைத்த காரியம் உடனே கை கூடிவிடுமென்று இங்கு வரும் பக்தர்கள் நம்புகின்றனர்.