மயிலம்: ஆலகிராம எமதண்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மயிலம் ஒன்றியத்திலுள்ள ஆலகிராமத்தில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட எமதண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு, திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வரருக்கு சிறப்பு அ பிஷேகம் நடந்தது. மாலை நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.