Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூர் மாகாளியம்மன் கோவிலில் ... ஆலகிராமம் கோவிலில் பிரதோஷ வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை கோவில்களில் பிரதோஷ பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2016
12:04

உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள, சிவன் கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. உடுமலை, திருமூர்த்திமலை, பஞ்சலிங்க அருவி பகுதியில் அமைந்துள்ள, பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, மாலை, 4:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கேஸ்வரர் சன்னதியில், சுவாமிக்கு மாலை, 4:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, அலங்கார பூஜை இடம்பெற்றது. உடுமலை, முத்தையா பிள்ளை லே-அவுட், சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள, சோழீஸ்வரர் சன்னதியில், மாலை, 4:30 மணிக்கு சோழீஸ்வரருக்கும், நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பிரதோஷ மூர்த்தி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், ரத்தின லிங்கேஸ்வரருக்கு மாலை, 4:30 மணிக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில், அபிஷேக பூஜை செய்யப்பட்டது. உடுமலை எலையமுத்துார் பிரிவு புவன கணபதி கோவிலில் உள்ள சிவன் சன்னதி, ருத்ரப்பா நகரில் உள்ள பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையத்தில் உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவில்களில், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மடத்துக்குளம், கடத்துார், அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அர்ச்சுனேசுவரர் கோவிலில், கணபதி ேஹாமத்தை தொடர்ந்து, அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. கொழுமத்தில் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்களில், சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar