விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த நன்னாட்டாம்பளையம் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 11ம் தேதி நடக்கிறது. முன்னதாக 10ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை நடக்கிறது. தொடர்ந்து 11ம் தேதி காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, மகா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.