ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
யாகசாலை பூஜை, சிறப்பு வழிபாடுகள், தீபாராதனையுடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. அ.தி.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் பக்தர்கள் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், மீனாட்சிசுந்தரேஸ்வரர், வள்ளிதெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், சுக்ரவர் அம்மனை பல்லக்கில் சுமந்து கோயில் பிரகாரத்தில் உலா கொண்டுவந்தனர். கொடியேற்று விழா சிறப்பு பூஜைகளை கோயில் அர்ச்சகர் சிவா, புரோகிதர்கள் ரமணிகணபதி, ரவி ஆகியோர் செய்தனர். இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு தினமும் காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலை 6 முதல் 8 மணிக்குள் யாகசாலை பூஜைகள், சுவாமி பிரகாரஉலா நடக்கின்றன. ஏப்.,19ல் மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது.