மதுரை: மதுரையில் பிராமணர் சங்க ஜெய்ஹிந்துபுரம் கிளையில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.சங்கத் தலைவர் பிச்சுமணி தலைமை வகித்தார். உமா மகேஸ்வரன் பூஜைகளை நடத்தி பஞ்சாங்க பலனை வாசித்தார். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மாநிலத் துணைத் தலைவர் அமுதன், அமைப்புச் செயலாளர் பக்தவச்சலம், செயலாளர் வெங்கடேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர். கிளை பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.