Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காலடியில் காலடி பதிப்போமா! திக் விஜய தத்துவம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உத்தமரை அளித்த பெற்றோர்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2016
04:04

துறவியாகி தவவாழ்வில் ஈடுபடுவது என்பது சாமான்யமான விஷயம் அல்ல. அதற்குரிய பூஜை, உணவு முறை, தியானம் என துறவுக்குரிய நியமங்களை யாராலும் எளிதில் பின்பற்ற முடியாது. அதுவும் சிறு  வயதில் துறவியாவதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. காஞ்சி மகாபெரியவர் சந்நியாசம் மேற்கொள்ளும் போது அவருக்கு வயது 13 மட்டுமே. அப்போது நடந்த நிகழ்ச்சிகள் நம் அனைவரின் உள்ளத்தையும் உருக்கக் கூடியவை என்றால் மிகையில்லை. மகாபெரியவரின் தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள். தாயார் மகாலட்சுமி. இந்த பெற்றோர் சுவாமிகளுக்கு இட்ட பெயர் சுவாமிநாதன். பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளையை துறவறத்திற்கு அனுப்ப பெற்றோர் மனம் இடம் தரவில்லை. காஞ்சி மடத்தின் அதிகாரிகள், உலக நலனுக்காகவும், காஞ்சி மடத்தின் பக்தர்களுக்காகவும் சுவாமிநாதனை விட்டுக் கொடுக்கும்படியும், அவர்களது மற்ற மூன்று குழந்தைகள் மீது அன்பு காட்டும்படியும் வேண்டினர். சுவாமிநாதனின் பெற்றோரோ மன உளைச்சலுடன் செய்வதறியாமல் தவித்தனர். அப்போது சுவாமி பெற்றோரிடம்,நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? எனக்கு குருநாதரின் அருள் பரிபூரணமாக இருக்கிறது. நீங்கள் முழுமனதுடன் துறவு பூணுவதற்கு அனுமதி கொடுங்கள், என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார். மகனின் பக்குவம் மிக்க சொற்கள் பெற்றோரின் உள்ளத்தை உருக்கியது. தங்களின் மனதைத் தேற்றிக் கொண்டு சந்நியாச வாழ்வு நடத்த அனுமதியளித்தனர். அதுவரையில் சுவாமிநாதனாக விளங்கியவர், தண்டம், முண்டம், கமண்டலம், காஷாயம் நான்கையும் ஏற்றுக் கொண்டு சந்நியாசியாக மாறினார். இதன் பின் அந்த புண்ணிய ஆத்மாக்கள் தம் பிள்ளையைச் சந்திக்கவே இல்லை. மனதில் எழும் ஆசாபாசங்களை போக்கவே துறவு மேற்கொள்வதால் தாய், தந்தை போன்ற நெருங்கிய உறவினர்கள் சந்நியாசிகளை நேரில் காணும் வழக்கம் இல்லை. தங்களின் மகன் மக்களின் துன்பம் போக்கி உலகத்தை நல்வழிப்படுத்த அவதரித்த மகான் என்பதை உணர்ந்து மகிழ்ச்சி கொண்டார்களா அல்லது உலகம் எல்லாம் போற்றும் காஞ்சிப் பெரியவரை தங்களால் காண முடியவில்லையே என்று எண்ணி வருந்தினார்களா என்பதை யார் அறிவார்......! இருந்தாலும் பிற்காலத்தில் அந்த பெற்றோரை சந்தித்து காஞ்சிப் பெரியவரை பற்றி ஏதாவது கேட்டால், அவர்கள் மவுனம் ஒன்றையே பதிலாக அளித்தனர். உத்தமரை உலகிற்கு அளித்த மகா உத்தமர்கள் அல்லவா அந்த பெற்றோர். (மகான் காஞ்சிப் பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar