பதிவு செய்த நாள்
19
ஏப்
2016
12:04
நியூயார்க்: இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட, 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரண்டு சிலைகள், அமெரிக்காவில் பறிமுதல் செய்யப்பட்டன. அமெரிக்காவில் உள்ள, கிறிஸ்டி ஏல விற்பனை நிலையத்தில், ‘தி லாஹிரி கலெக் ஷன்’ என்ற பெயரில், ஹிமாச்சல பிரதேசத்தின் பழமையான மற்றும் புதிய சிற்பங்களின் கண்காட்சி மற்றும் ஏல விற்பனை, அடுத்த வாரம் நடக்கவுள்ளது. அதில், இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்ட, 10 மற்றும், எட்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்த இரண்டு சிலைகளை, அந்நாட்டு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலைகளின் மொத்த மதிப்பு, மூன்று கோடி ரூபாய் என, தெரியவந்துள்ளது. இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.