திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு ஏப்.22ல் சித்திரைத் தேரோட்டம் நடக்கிறது. கடந்த ஏப்.,12ல் பூர்வாங்க பூஜை,மறுநாள் கொடியேற்றி காப்புக்கட்டி மகோற்சவம் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை சுவாமி புறப்பாடு, இரவில் வாகனங்களில் சுவாமி தேவியருடன் திருவீதி உலா நடைபெறுகிறது.நேற்று மாலை தங்கப்பல்லக்கில் பெருமாள் பவனி வந்தார். இன்று காலை 9 மணிக்கு சுவாமி புறப்பாடும், குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும். நாளை காலை தேருக்கு தலையலங்காரம் துவங்கும். ஏப்.,22ல் காலை 9.13 மணிக்கு பெருமாள் தேருக்கு எழுந்தருளுவார்.மாலை 4.33 மணிக்கு தேரோட்டம் துவங்கும். ஏப்.,24ல் புஷ்பப்பல்லக்குடன் மகோற்சவம் நிறைவடையும்.