ஆண்டாள் கோயில் உண்டியல் திறப்பு ரூ.19 லட்சம், 165 கிராம் தங்கம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2016 01:04
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ.19 லட்சம் மற்றும் 165 கிராம் தங்கம் பக்தர்கள் காணிக்கையாக கிடைத்தது. இக்கோயில் உண்டியல் அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா தலைமையில் திறக்கப்பட்டது. செயல்அலுவலர் ராமராஜா, ஆய்வாளர் பாண்டியன் மற்றும் கோயில் அலுவலர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டதில்,ரூ.19 லட்சத்து 66 ஆயிரத்து 665 ரொக்கம், 165 கிராம் தங்கம், 226 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக கிடைத்தது.