வால்பாறை: புனித அந்தோணியார் தேர்த் திருவிழாவில் நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை அடுத்துள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ளது புனித அந்தோணியார் ஆலயம். இந்த ஆலயத்தேர்த்திருவிழா கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்றுமுன்தினம் மாலை, 6:30 மணிக்கு வால்பாறை ஆர்.சி.,சர்ச் ஆலய பங்குதந்தை வின்சென்ட்பால்ராஜ் தலைமையில் ஆடம்பர தேர்பவனி- கூட்டுப்பாடற்பலி நடந்தது. தேர்பவனி அக்காமலை பேக்டரியிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதி வழியாக சர்ச் வளாகத்தை சென்றடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயபங்குதந்தை மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.