திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் பந்தகால் முகூர்த்தம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2016 04:04
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவில் பிரமோற்ச விழாவையோட்டி பந்தகால் முகூர்த்தம் நடந்தது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற சனிஸ்வர பகவான் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.நவகிரக ஸ்தலிங்களில் திருநள்ளார் சனி பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி நேற்று முன்தினம் பந்தகால் முகூர்த்தம் நடந்தது.இவ்விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இக்கோவிலில் வருகிற மே4ம் தேதி பிரமோஸ்வ விழா கொடியேற்றதுடன் துவங்கவுள்ளது.மே.18ம்தேதி தேரோட்டமும், 19ம் தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது.இவ்விழாக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்துவருகின்றனர்.