காஞ்சிபுரம் கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளை சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2016 02:04
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், நாளை, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, அனைத்து முக்கிய கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமி நடவாவி உற்சவத்தை முன்னிட்டு, கோவிலில் இருந்து, நாளை இரவு, 9:00 மணிக்கு புறப்பட்டு, தூசி, அப்துல்லாபுரம், நத்தகொள்ளை, வாகை போன்ற கிராமங்களுக்கு செல்கிறார். மறு நாள் வெள்ளி கிழமை அய்யங்கார் குளம் பகுதியில் உள்ள நடவாவி கிணற்றில் பெருமாள் எழுந்தருள்வார்; அன்று இரவு பாலாற்றிற்கு செல்வார்.