பதிவு செய்த நாள்
21
ஏப்
2016
03:04
இடைப்பாடி: இடைப்பாடியில் சித்திரை தேர்திருவிழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம், நேற்று நடந்தது. இடைப்பாடியில், பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர், சித்திரை தேர் திருவிழா, கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதில், முக்கிய நிகழ்வான, பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரருக்கும், தேவகிரி அம்மனுக்கும் திருக்கல்யாணம், நேற்று நடந்தது. இதில், 2,000க்கும் மேற்பட்ட கட்டளைதாரர்கள் கலந்துகொண்டனர். திருவிழா குழுவை சேர்ந்த மேட்டுத்தெரு ஊர்கவுண்டர் பொன்னுவேல் கவுண்டர், ஆலச்சம்பாளையம் பழனிகவுண்டர், தாவாந்தெரு கே.என்.முருகேசன் மற்றும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.