ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருமணத்திற்கு பெண்கள் சீர்வரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2016 03:04
நாமகிரிப்பேட்டை: சீராப்பள்ளி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருமணத்துக்கு பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். ராசிபுரம் அடுத்த, சீராப்பள்ளியில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இதில், ராமலிங்கேஸ்வரருக்கும், சவுடேஸ்வரி அம்மனுக்கும் இன்று திருமணம் நடக்கவுள்ளது. நேற்று மாலை பெண் அழைக்கும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சீர் வரிசை கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் தங்க நகை, பழங்கள், இனிப்பு, காரம் உள்ளிட்ட சீர் வரிசை தட்டுகளை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். இன்று காலை, 9 மணிக்கு சுப முகூர்த்தம் நடக்கிறது.