கண்டாச்சிபுரம்: சித்தாத்துார் கெங்கை அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. கண்டாச்சிபுரம் அடுத்த சித்தாத்துார் ஊராட்சியில் உள்ள கெங்கை அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. முன்னதாக மழை வேண்டி கெங்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர், காத்தவராயன் சுவாமி ஊர்வலமும், தொடர்ந்து வேப்பிலை கரக ஊர்வலமும் நடந்தது. மதியம் 12:30 மணியளவில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.