பதிவு செய்த நாள்
21
ஏப்
2016
03:04
வேலாயுதம்பாளையம்: புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் பள்ளி மாணவர்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். வேலாயுதம்பாளையம் அடுத்த, புகழூரில் மேகபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலைச் சுற்றி செடி, கொடிகள், புற்கள் அதிகம் முளைத்திருந்ததால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில், டி.என்.பி.எல்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, என்.சி.சி., மாணவர்கள் சார்பில், இக்கோவிலில் உழவாரப்பணி, நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, கோவில் வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்றினர். இதில், கோவில் நிர்வாகி மேகநாதன், பள்ளி முதல்வர் வள்ளியம்மை, என்.சி.சி., அலுவலர் மணிமாறன், கோவில் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.