பதிவு செய்த நாள்
22
ஏப்
2016
12:04
உடுமலை: உடுமலை, திருமூர்த்தி நகர், தளி வாய்க்கால் கரையில் உள்ள, வனதுர்க்கை அம்மன் கோவில், 12ம் ஆண்டு கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இதற்கான விழா, ஏப்., 20ம் தேதி, முளைப்பாரி மற்றும் அம்மனுக்கு தீர்த்த கலசம் எடுத்து வருதலுடன் துவங்கியது. தொடர்ந்து, கணபதி வழிபாடு, வாஸ்து பூஜை, கோ தரிசனம், கிராம சாந்தி, முதற்கால யாக வேள்வி, யாகசாலை பிரவேசம், திசை வழிபாடு, யாகசாலை திருவிளக்கு ஏற்றுதல், கும்ப அலங்காரம், யாக ேஹாமம், இரண்டாம் கால யாக வேள்விகள் நடந்தன. நேற்று அதிகாலை, 4:30 மணி முதல், மகா கணபதி வழிபாடு, மூன்றாம் கால யாக வேள்வி செய்யப்பட்டு, கும்ப கலசங்கள் காலை, 9:10 மணிக்கு, எடுத்து செல்லப்பட்டன. காலை, 9:20க்கு விமான கலசத்துக்கும் தொடர்ந்து, மகா கணபதி, வனதுர்க்கை அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிேஷகம் செய்யப்பட்டது; திருப்பூரை சேர்ந்த விஸ்வமூர்த்தி மற்றும் வைகுந்தராமன் ஆகியோர் நடத்தி வைத்தனர். தளி, பள்ளபாளையம், குரல்குட்டை, திருமூர்த்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கும்பாபிேஷக விழாவில் பங்கேற்றனர்.