தேவகோட்டை: தேவகோட்டை பக்தர்கள் திருச்செந்துாருக்கு 40 ஆண்டுகளாக காவடியுடன் பாதயாத்திரையாக செல்கின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் ஒரு வேல் துணையோடு 17 பேர் காவடி ஏந்தி புறப்பட்டனர். பாதயாத்திரையை குழுத் தலைவர் அருசோமசுந்தரன் தலைமை வகித்தார். அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி துவக்கி வைத்தார். குழு துணைத் தலைவர் காசிநாதன் வரவேற்றார். லயன்ஸ் ராஜேந்திரன் பங்கேற்றார். செயலர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார். அந்த குழுவினர் மே 1ல் திருச்செந்துார் சென்றடைவர். அங்கு காவடி செலுத்தி, பால்குடம் எடுத்து முருகனை வழிபடுகின்றனர். பின் தங்கரதம் இழுக்கின்றனர்.