நம் கஷ்டங்கள் நீங்க என்ன செய்ய வேண்டும்: ஸ்ரீ விட்டல்தாஸ் மகாராஜ் பேச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2016 11:04
மதுரை: மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் சத்குரு சங்கீத சமாஜம், ருக்மணி விட்டல் சமஸ்தான் சார்பில் நாம சங்கீர்த்தனம் பஜனை மற்றும் சொற்பொழிவு நடந்தது.ஸ்ரீ விட்டல் தாஸ் மகாராஜ் பேசியதாவது: கோயில்களில் உள்ள இறைவன் மக்கள் மனதை எளிதில் ஈர்த்துவிடுகிறான். அதனால் தான் கொளுத்தும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் சித்திரை திருவிழாவில் கள்ளழகரை பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடினர். யார் வாக்கில் 24 மணி நேரமும் இறைநாமம் இருக்கிறதோ அவரிடம் மட்டுமே நான் பேச வேண்டும் என, ஒரு பக்தர் கூறுகிறார். பஜனை என்பது நாம கீர்த்தனம், கதை என்பது குண கீர்த்தனம். இவை இரண்டையும் கேட்பவர்களுக்கு கடவுளின் நாமத்தை கூற வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும்.நமக்கு வரும் கஷ்டங்களை நம்மால் போக்க முடியாது. பஜனை கேட்டால் பஞ்ச பாவங்களும், கிருஷ்ணா என்றால் சகல கஷ்டங்களும் நம்மை விட்டு நீங்கும் என புரந்தர்தாசர் கூறியுள்ளார். பட்டினி கிடந்து இறைவன் நாமத்தை சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. இறைவனை மனப்பூர்வமாக வழிபட்டாலே போதும், அவன் நம்மிடம் பேசுவான், என்றார். இந்நிகழ்ச்சி மே 1 வரை தினமும் மாலை 6.30 மணிக்கு சத்குரு சங்கீத சமாஜம் மற்றும் பைபாஸ் சிருங்கேரி சங்கர மடத்தில் காலை 8.30 மணிக்கும் நடக்கிறது.