பதிவு செய்த நாள்
26
ஏப்
2016
11:04
பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனியில் உள்ள யோகாம்பாள் சமேத யோகீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஜி.ஓ., காலனியில் அமைந்துள்ள இக்கோவிலில் விநாயகர், யோகாம்பாள், யோகீஸ்வரர், கல்யாண சுப்பிரமணியர், ஐயப்பன், காலபைரவர், விஷ்ணு துர்க்கை, நவகிரக கோவில்கள் உள்ளன. இக்கோவில் வளாகம் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. அனுவாவி சுப்பிரமணியர் கோவிலைச் சேர்ந்த ஆதீஸ்வரர் சுவாமி தலைமையில் சடங்குகள் நடந்தன. விழாவையொட்டி, கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அன்னதானம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல், 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடக்கின்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.