பதிவு செய்த நாள்
26
ஏப்
2016
11:04
பொன்னேரி : சுந்தர விநாயகர் மற்றும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. பொன்னேரி அடுத்த, வேம்பேடு கிராமத்தில் உள்ள சுந்தர விநாயகர் மற்றும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன. 20 ஆண்டுகளுக்கு பின், நேற்று, ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு யாக பூஜை, விசேஷ ஹோமம், பூஜைகள் சிறப்பாக நடந்தன, காலை, 9:00 மணிக்கு சுந்தர விநாயகர் கோவில் விமானத்திற்கும், காலை, 9:30 மணிக்கு மூலஸ்தானத்திற்கும், காலை, 9:45 மணிக்கு ஸ்ரீனிவாச பெருமாள் விமானத்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேக விழா வில், வேம்பேடு, மெதுார், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று விநாயகரையும், பெருமாளையும் வழிபட்டு சென்றனர்.