பதிவு செய்த நாள்
26
ஏப்
2016
11:04
மோகனூர்: மோகனூர் மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. தொடர்ந்து, காலை, 9 மணிக்கு காவிரி ஆற்றுக்குச் செல்லும் பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை, 3 மணிக்கு, பக்தர்கள் ஊர்வலமாக வந்து, கோவில் முன் ஏற்படுத்தப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று காலை, 6 மணிக்கு கிடா வெட்டும், இரவு, 7 மணிக்கு மாவிளக்கு பூஜையும், நாளை (ஏப்., 27) அதிகாலை, 4 மணிக்கு கம்பம் பிடுங்கி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், மாலை, 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.