விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியத்தில் உள்ளது அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், பொதுவாக, பசுவின் குளம்படிப்பட்ட லிங்கம். சாய்ந்தகோல லிங்கம், வெட்டுப் பட்ட லிங்கம், நிறம் மாறும் லிங்கம், நாகத்தை உடலில் தாங்கிய லிங்கம் என பார்த்திருப்போம். ஆனால், இக்கோயிலில் உள்ள லிங்கத்துக்கு தேன் அபிஷேகம் செய்யும்போது இடை நெளிந்த, கையில் கிளியுடன் கூடிய அம்பாள் காட்சி தரும் அதிசயத்தைக் காணலாம்.