திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில் சுமார் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தாடிக்கொம்பு-சவுந்தர்ராஜ பெருமாள் கோயில். இங்கு அருள்பாலிக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு, கார்த்திகை மாத ஜன்மாஷ்டமி விசேஷம்! அன்று ராகு நேரத்தில், சனி ஹோரையில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் சனி பார்வையின் உக்ரம் குறையும். சனிதோஷம் விலகும். மேலும் பைரவருக்கு, மஞ்சள் தூள் மற்றும் செவ்வரளிப் பூவினால் அர்ச்சனை செய்து சிவப்பு வஸ்திரம் படைத்து வழிபட்டால், கடன் தொல்லை, குடும்பப் பொருளாதார பிரச்னை, சொத்துப் பிரச்னை, பில்லி, சூனியம் போன்ற அனைத்து பிரச்னைகளும் விலகும் என்கிறார்கள்.