மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருக்குளத்தில் ஒரு சித்ரா பவுர்ணமியன்று பொன்னாலான தாமரையை மலரச் செய்து, அதனை எடுத்து வரவழைத்து இந்திரன் சொக்கேசரை பூஜித்ததாகச் சொல்லப்படுகிறது. இன்றும் அந்த சிவலிங்கத்தை வழிபடும் பொருட்டு சித்ரா பவுர்ணமி அன்று தேவேந்திரன் மதுரைக்கு வருவதாக ஐதிகம்.