வீட்டின் வாயிலில் லட்சுமி ஐந்து வடிவங்களில் வீற்றிருக்கின்றாள். தலைவாயில்களை அமைக்கும் அளவுகளில் பஞ்சலட்சுமி லட்சணம் என்ற அளவு உள்ளது. விழா நாட்களில் தலைவாயிலில் மாவிலைத் தோரணம் கட்டுதல், பெரிய மாலைகளை அணிவித்தல் முதலியவற்றால் லட்சுமி மகிழ்ந்து அருள்புரிகிறாள்.