ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா அருகில், ரிவர்டேல் எனும் நகரத்தில் அமைந்திருக்கிறது இந்த கோயில். பார்ப்பதற்கு நந்தவனம் போன்று திகழும் சூழலில், இரண்டு கோயில்கள் திகழ்கின்றன. ஒன்று வேங்கடேஸ்வரருக்கு; மற்றொன்று ராமலிங்கேஸ்வரருக்கு, பத்மாவதி தாயார், ஆண்டாள் தாயாருடன் வேங்கடேஸ்வரர் அருளும் கோயிலில், கருடன், அனுமன், துர்கை, நவகிரகங்கள் ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் உள்ளன. ராமலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் பர்வதவர்த்தினி, கணேசர், தேவியருடன் முருகப்பெருமான், ஜனன சரஸ்வதி, கன்யாபரமேஸ்வரி, நாகேந்திரா, காலபைரவர் ஆகிய தெய்வங்களைத் தரிசிக்கலாம்.