பழநி: பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 753 கிராம், வெள்ளி 7,650 கிராம், வெளிநாட்டு கரன்சி 363, ரொக்கமாக ரூ. ஒருகோடியே 70 லட்சத்து 95 ஆயிரத்து 004 கிடைத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியிலான வேல், தாலி, உருவம், சுவாமி சிலைகள் உள்பட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், முதுநிலை கணக்கியல் அலுவலர் வீரச்சாமி, மற்றும் கோயில் அலுவலர்கள், வங்கிப்பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை தொடர்கிறது.