திருக்கனுார் திரவுபதியம்மன் கோவிலில் தர்மர் பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2016 12:04
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழாவையொட்டி, தர்மர் பட்டாபிஷேகம் நேற்று நடந்தது. திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 21ம் தேதி காலை 10:30 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம், 23ம் தேதி காலை 11:00 மணி தேர் திருவிழா நடந்தது. முக்கிய நிகழ்வான தீமிதி விழா, 24ம் தேதி மாலை 6:00 மணிக்கு நடந்தது.இதில் கூனிச்சம்பட்டு மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம், தீமிதி விழா நிறைவாக தர்மர் பட்டாபிஷேகம் நடந்தது. இதில், பொதுமக்கள் அன்னதானம் வழங்கி, சுவாமி தரிசனம் செய்தனர்.